புத்தாண்டு காலத்தில் 35,000 காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில்!

0
7

புத்தாண்டு காலத்தில் மக்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 35000 காவல்துறை அதிகாரிகளை புத்தாண்டு காலப்பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக புத்திக்க மனதுங்க தெரிவித்தார். விசேடமாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் சிவில் உடையணிந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு பிரதேசத்தில் பாதுகாப்புக்காக வாகன போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் உட்பட 6,000 காவல்துறை அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்திக்க மனதுங்க தெரிவித்தார்