29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

புத்தாண்டு தினமான இன்றும் போராட்டம்; பல்லாயிரம் பேர் திரள்வு

புது வருட தினமான இன்றும் அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம் தொடர்ந்தது. அனைத்து இன, மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் பால் காய்ச்சி புத்தாண்டை வரவேற்று போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக கராப்பிட்டி போதனா மருத்துவமனைக்கு முன்பாகவும், கண்டி மணிக்கூட்டு கோபுரம் முன்பாகவும் காலி – எல்பிட்டியிலும், நுவரெலியாவிலும் போராட்டங்களை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரின் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று கோரி கடந்த 9ஆம் திகதி கொழும்பு – காலிமுகத்திடலில் போராட்டம் ஆரம்பமானது. கோட்டா கோ கம என்று பெயரிடப்பட்ட போராட்டகளத்தில் பலநூறு பேர் தொடர்ச்சியாக தங்கியிருந்து போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு தினமான நேற்று பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

தமிழ் – சிங்கள புதுவருடத்தை வரவேற்கும்விதமாக போராட்ட களத்தில் பால் காய்ச்சிய போராட்டக்காரர்கள் உணவு, பலகாரங்களையும் பரஸ்பரம் வாழ்த்துக்களையும் பரிமாறினார்கள். இதைத் தொடர்ந்து போராட்ட கோஷங்களை எழுப்பினர்.

காலிமுகத்திடலில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று காலி காரப்பிட்டி போதனா வைத்தியசாலை, எல்பிட்டி பல்கலைக்கழகம் முன்பாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, உணவு மேசையை வைத்து உணவுப் பொருட்களையும் அவர்கள் சேகரித்ததுடன், தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இதேபோன்று, கண்டி, நுவரெலியாவிலும் ஆதரவுப் போராட்டங்கள் நடைபெற்றன.

இதேவேளை, நேற்றிரவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்ட களத்தில் தொடர்ந்து இருந்து கோஷங்களை எழுப்பியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles