புறக்கோட்டையிலுள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்!

0
3

புறக்கோட்டை – பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (13) காலை ஏற்பட்ட இந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்கு கொழும்பு மாநகரசபையின் 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தீப்பரவலினால், குறித்த வர்த்தக நிலையம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தீப்பரவலுக்கான காரணம் தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.