31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

புளு மூன் நிகழ்வு

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வரும் (நீல நிலா) ´புளு மூன்´ நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு மீண்டும் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெறும்.

புளு மூன் என்று கூறுவதால் நிலவின் நிறத்தில் பெரிய மாறுபாடு எதுவும் இருக்காது. இது முழுக்க முழுக்க பவுர்ணமியின் கால நேரத்தை பொறுத்தது என்று நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமியில் இரண்டாவதாக வரும் பவுர்ணமியே புளு மூன் ஆகும்.

மாதத்தில் ஒரு முறை மட்டுமே பவுர்ணமி வரும். எப்போதாவது சில சமயங்களில் இரண்டு பவுர்ணமி வருவது உண்டு. 29 நாட்களுக்கு ஒரு முறை வரும் பவுர்ணமி, மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் இருப்பதால், சராசரியாக 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வருவதும் உண்டு.

இந்த புளு மூன் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் தெரியும். இதை புகைப்படம் எடுப்பது அவ்வளவு சுலபமில்லை என்று; வானியல் கல்வியாளர் ஜெப்பரி ஹண்ட் என்பவர் தெரிவித்துள்ளார். புளு மூனை ஸ்மார்ட் போனில் புகைப்படம் எடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். டெலிபோட்டோ உதவியுடன் எடுத்தால் நிலவை சற்று பெரிதாக காட்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த புளு மூனை தவறவிட்டால் அடுத்து வரும் புளு மூனுக்காக காத்திருக்க வேண்டி வரும். 2023 ஆகஸ்ட் மாதம் 31ஆம், 2026 மே மாதம் 31-ஆம், 2028 டிசம்பர் மாதம் 31-ஆம் திகதிகளில் இது மீண்டும் தோன்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles