24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

புஷ்-அப்பில் கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி

கனடாவை சேர்ந்த டோனாஜீன் வையில்டின் என்ற  59 வயதான மூதாட்டி ஒருவர் ஒரு மணி நேரத்தில் 1,500 புஷ்-அப்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இவர் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து உலக சாதனையை படைத்துள்ளார்.

ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும், புஷ்-அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவை என்கிற நிபந்தனைகளுடன் டோனாஜீன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

அவர் ஏற்கனவே புஷ்-அப்பில் உலக சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை 17 நிமிடங்களுக்கு முன்னதாகவே செய்து தனது சாதனையை தாமே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், `நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் என்னை வலுவாக உணர்ந்தேன். அடுத்த 17 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான புஷ்-அப்களை முடிக்க இலக்கு வைத்துள்ளேன் என்றார். டோனாஜீனுக்கு 12 பேரக்குழந்தைகள் உள்ளனர். 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles