பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழப்பு

0
88

பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உட்பட முக்கிய கொமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7-ம் தி காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலுக்கு பின்னர், இஸ்ரேல் உக்கிரமான போரை தொடங்கியது.

இந்த போர் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைடைவந்துள்ளது.
பெய்ரூட்டில் இன்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.ஹிஸ்புல்லா அமைப்பின் தளபாடங்கள், வரவு செலவுத் திட்டம் மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் தளபதியே கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.