28.7 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பேலியகொடை மீன் நாடு முழுக்க சென்றது ஆபத்து – வைத்தியர் சுதத் சமரவீர

மினுவாங்கொடயிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 13 மாவட்டங்களுக்கு பரவத்தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ள தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் சுடத்சமரவீர ஏனைய மாவட்டங்களுக்கும் கொரோனா பரவும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

குருநாகல் புத்தளம் கேகாலை கண்டி காலி அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வவுனியா அனுராதபுரம் வவுனியா பொலனறுவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் விசேடமாக கம்பஹாவிலிருந்தும் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


பேலியகொட மீன்சந்தையில் மீன்விற்பவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மீன்விற்பவர்கள் ஊடாக கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் பரவும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பேலியகொடை மீன்சந்தையிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் மீன்களை விற்பனை செய்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக தொற்றிற்குள்ளானவர்கள் இருக்ககூடும் என தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles