தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அக்டோபர் மாதத்தில் மாத்திரம் அரசாங்கம் 7.3 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
கொவிட் 19 வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 7.3 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை (7355.53 மில்லியன்) நிதியை வழங்கியுள்ளது.
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொவிட் 19 வைரஸ் மீண்டும் பதிவானதன் பின்னர் இந்தக் காலப்பகுதி வரை இந்த அலுவல்களுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.