பொரளையில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்!

0
10

கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெறவிருக்கும் விழாவையொட்டி, பொரளையில் நாளை திங்கட்கிழமை (07) மாலை விசேட போக்குவரத்து திட்டம் ஏற்பாடுகள் செய்யப்படும் என  பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளையில் உள்ள கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெறும் விழாவில், மதப் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மதகுருமார்கள் பொதுமக்கள் என  ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, விழா நடைபெறும் நாளான திங்கட்கிழமை (07) மாலை பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பொரளை பொலிஸ் பிரிவுக்குள் உள்ள கின்சி வீதி மற்றும் ஹோர்ட் பிளேஸ் முதல் நந்ததாச கோடகொட சந்திப்பு வரையிலான பகுதியில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படும்.

வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கிறார்கள்.