29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘பொறுப்பு வாய்ந்தவர்களின் பொறுப்பு’

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கும் கூற்று ஒன்றை, உண்மைகளை ஆராயும் தளம் (FactCheck) கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது. விக்கினேஸ்வரன் கூறியது என்ன? நாடாளவிய ரீதியில் வேலையற்றவர்களின் விகிதம் 6மூ விகிதத்திற்கும் குறைவாக இருக்கின்ற நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் வேலையற்றவர்களின் விகிதம் 10மூ தாண்டிவிட்டது என விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். இந்தக் கூற்றை மேற்கோள் காட்டி, கொழுழ்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமொன்று விக்கினேஸ்வரன் பிழையான தகவல்களை வெளியிடுவதாக குறிப்பிட்டிருக்கின்றது.

இலங்கையின் புள்ளிவிபரங்களின் படி, வேலையற்றவர்களின் விகிதம் எங்குமே 10 விகிதத்தை தாண்டவில்லை. வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டமே, வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டமாகும். மட்டக்களப்பின் வேலையற்றவர்களின் விகதம் 7.2மூ. இதற்கு அடுத்தது அம்பாறை மாவட்டமாகும். அங்கு 6.9மூ. அதற்கடுத்ததுதான் யாழ்ப்பாணம். அங்கு 6.0மூ முழு இலங்கையையும் பொறுத்தவரையில், மாத்தறைதான் வேலையற்றவர்கள் அதிகமுள்ள மாவட்டமாகும். அங்கு மொத்த சனத்தொகையில் 7.5மூ வேலையற்றவர்களாக இருக்கின்றனர். அதற்கடுத்த மாவட்டமாக மாத்தளை இருக்கின்றது. அங்கு 7.4மூ. அதற்கடுத்தது அம்பாந்தோட்டை. அங்கு 7.3மூ ஆகும். இந்த தகவலை காண்பித்தே குறித்த ஊடகம் விக்கினேஸ்வரனின் அறிக்கையை உண்மைக்கு மாறானது என குறிப்பிட்டிருக்கின்றது. குறித்த குயஉவஊhநஉம ஒரு வேளை அரசாங்கத்தினால் நடத்தப்படுமாக இருந்தால், இது அரசின் திட்டமிட்ட பிரச்சாரம் என்று ஒதுக்கிவிடலாம் ஆனால் குறித்த தளம் வெரிட்டே ஆய்வு (ஏநசவைé சுநளநயசஉh) – என்னும் அரசுசாரா நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவருகின்றது. அரசியல்வாதிகளின் அறிக்கைகளிலுள்ள உண்மைகளையும் பொய்களையும் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்துவதே இந்தத் தளத்தின் பிரதான பணியாக இருக்கின்றது.

விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருக்கின்ற போது இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியவர். அதே வேளை தமிழ் மக்களுக்கான நீதி தொடர்பில் உறுதியாக குரல் கொடுத்துவருபவர். இவ்வாறானதொரு பொறுப்பு வாய்ந்தவர் போதிய ஆய்வுகள் இல்லாமல் தகவல்களை வெளியிடும் போது, விக்கினேஸ்வரன் பேசிவரும் ஏனைய விடயங்களை கூட, மற்றவர்கள் சந்தேகத்துடன் நோக்கும் நிலைமை உருவாகலாம். இது தமிழ் மக்களின் நீதி நோக்கிய பயணத்தில் பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஆய்வுகளுடன் தகவல்களை வெளியிடும் பழக்கம் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. தமிழர்களுக்கென சுயாதீனமான ஆய்வு நிறுவனங்கள் இல்லாமையே இதற்கான காரணமாகும். அப்படியான நிறுவனங்களை உருவாக்குவதில் அரசியல்வாதிகள் ஒரு போதும் அக்கறை எடுத்ததுமில்லை. இதன் காரணமாக அரசியல்வாதிகள் தங்களின் வாயில் அகப்படுவதையெல்லாம் பேசும் போக்கொன்று தமிழ் அரசியல் சூழலில் காணப்படுகின்றது. அரசியல்வாதிகள் புள்ளிவிபரங்கள் தொடர்பில் பேசும் போது முன்கூட்டிய ஆய்வுகள் அவசியம். இதற்கென ஆலோசனை வழங்கக் கூடிய அமைப்புக்களை வைத்திருப்பது அவசியம். தமிழ் பிரதிநிதிகள் இவ்வாறு போதிய ஆய்வுகள் இல்லாமல் தகவல்களை வெளியிடுவதானது, அவர்கள் கூறும் அனைத்து விடயங்களையுமே மற்றவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைமையை உருவாக்கிவிடலாம். எனவே அறிக்கைகளை வெளியிடும் போது பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்பாக நடந்துகொள்வது அவசியம்.

-ஆசிரியர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles