பொலிவுட் ‘பிக் பி’யுடன் மீண்டும் இணையும் சுப்பர் ஸ்டார்

0
143

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து, அவர் புதிதாக நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய வேடத்தில் பொலிவுட் ‘பிக் பி’ எனப் போற்றப்படும் நடிகர் அமிதாபச்சன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

‘கூட்டத்தில் ஒருத்தன்’, ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

‘தலைவர் 170’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில்  பொலிவூட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமிதாப்பச்சன் நடிக்கிறார்.

தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இருவரும் நடிப்பது உறுதியானால், 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஒரே படத்தில் இணைகிறார்கள் என்பதும், இதன் காரணமாக ‘தலைவர் 170’ குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.