முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு செல்வபுரம் கிராம வீதிகள் செப்பனிடப்பட்டுள்ள போதிலும் பேரூந்து போக்குவரத்து வசதிகள் எதுவும் தமது கிராமத்திற்கு செய்து கொடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த பகுதி மக்கள் மீள் குடியேறி 10 வருடங்கள் கடந்தும் சீரான போக்குவரத்து வசதிகளின்றி உள்ளதாக தெரிவிக்கும் செல்வபுரம் கிராம மக்கள், பாண்டியன்குளம் பகுதிக்கு வரும் அரச பேருந்துகளையாவது பாண்டியன்குளம் பகுதியில் இருந்து 2 கிலோ மீற்றர் தூரம் இருக்கும் செல்வபுரம் கிராமத்திற்கும் சேவையினை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Home முக்கிய செய்திகள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு செல்வபுரம் கிராம மக்கள் கோரிக்கை!