கொரோனா வைரஸ் தற்போது வீடுகளுக்குள் நுழைந்துள்ளதால் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள அதேவேளை இந்தத் தொற்றால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாலும் நாடு மிகவும் ஆபத்தான நிலையில் பயணிக்கிறது என்பதை அறியமுடிகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கொரோனா தொற்றால் 11 மரணங்கள் பதிவாகியுள்ளமை மிகவும் ஆபத்தான நிலை என்று அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் முதலாவது கொரோனா தொற்றின் போது 9 மாதங்களில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவாகின.
இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 11 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களுள் சிலர் உயிரிழந்த பின்னரே கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை இனங்காணப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்காலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு வீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.