28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் ஈஸ்டர் நினைவு தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு புனித செபஸ்தியார் தேவாலயத்தில், ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான விசேட திருப்பலி பூஜையும் நினைவேந்தல் நிகழ்வும் இன்று நடைபெற்றது. ஆலயத்தின் பங்குத்தந்தை அனஸ்டின் அடிகளாரின் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.


ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன.
ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றது.
புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடைபெற்ற விசேட திருப்பலியில், அருட்தந்தை நவரெட்னம் அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


புனித செபஸ்தியார் ஆலய முன்றிலில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் போது உயிர்நீர்த்தவர்களின் உருவப்படம் தாங்கிய பதாகை வைக்கப்பட்டு, அதற்கு முன்பாக சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு மௌனஅஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பொதுமக்கள், அருட்சகோதரிகள், ஆலய பங்குமக்கள் என பெருமளவானோர் இதில் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles