மட்டக்களப்பு ஓட்டமாவடி மீராவோடை மன்ப உல் ஹீதா அரபுக் கல்லூரியில் இன்;று மீலா துந் நபி விழா கொண்டாட்டம் வெகுசிறப்பாக இடம்பெற்றது. கல்லூரியின் ஸ்தாபகர் தலைவர் மௌலவி எல்.ரி.எம்.இஸ்ஹாக் பஹ்ஜி மற்றும் அதிபர் மௌலவி எ.பி.எம்.மர்ஹான் ஆகியோர் தலைமையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் மாமனிதர் நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்புரை இடம்பெற்றதோடு, நபிகள் நாயகத்தின் புகழ்பாடும் கொடி ஊர்வலமும் வாகனப் பேரணியாக, மீராவோடை மன்ப உல் ஹீதா அரபுக் கல்லூரியில் இருந்து ஓட்டமாவடி ஊடாக மீண்டும் அரபுக் கல்லூரியை வந்தடைந்தது.