மட்டக்களப்பு காத்தான்குடி ஆறாம் குறிச்சி மன்ப உல் ஹைராத் பள்ளி வாயலில் நபிகள் நாயகம் அவர்களின் புகழ் கூறும் மௌலூத் மஜ்லிஸ் இன் 48வது வருடம் இன்று ஆரம்பமானது.
அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் மௌலவி ஏ.ஜே.அப்துர் ரவூப் மிஸ்பாஹி இதன் கொடியை ஏற்றி வைக்க துஆப் பிராத்தனையை காத்தானாகுடி அல் ஜாமியத்துல் றப்பாணிய்யாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி மஜீத் நிகழ்த்தினார்.
மௌலூத் மஜ்லிஸ் தொடர்ந்து 12 தினங்களுக்கு இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு தினமும் மார்க்க உபன்யாசம் இடம் பெறுவதுடன் பல் வேறு நிகழ்வுகளும் இடம் பெற்று இறுதி தினத்தன்று அன்னதானம் வழங்கப்படவுள்ளது. ஆரம்ப நிகழ்வில் உலமாக்கள் உட்பட பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்