மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்
ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் நீண்டகாலமாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சையும் பெற்றுவந்தமை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் விசாரணைகளின் பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக
சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.