மட்டக்களப்பு டான் தொலைகாட்சி
குழுமத்தின் வாணி விழா

0
276

கிழக்கு மாகாணத்தின் தலைமை அலுவலகமான மட்டக்களப்பு டான் தொலைகாட்சி குழுமத்தின் வாணி விழா பூஜைகள் நேற்று மாலை மிகச்சிறப்பாக நடைபெற்றது முப்பெரும் தேவிகளுக்குரிய தினமாக நவராத்திரி தினத்தின் ஆயுத
பூஜையை சிறப்பிக்கும் வகையில் டான் தொலைகாட்சி மட்டக்களப்பு கிளை அலுவலகத்தின் வாணி விழா சிறப்பு பூஜை நிகழ்வுகள் முகாமையாளர் அனன்ஸியா அவுட்ஸ்கோன் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஆதி சௌந்தராஜ குருக்களின் தலைமையில் நடைபெற்ற .வாணி விழா சிறப்பு பூஜையில் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர் ,இதேவேளை, மட்டக்களப்பு கல்லாறு பிராந்திய அலுவலககத்திலும் வாணி விழா சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

அலுவலகத்தின் மேற்பார்வையாளர் ரமணன் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற வாணி விழா சிறப்பு பூஜைகளில் அலவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை கொண்டு விளங்கும் முப்பெரும் தேவிகளுக்கு ஒன்பது தினங்கள் விசேட பூஜைகள் நடைபெற்று நவராத்திரி தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.