மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு இம்முறை 449,686 பேர் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கல்குடா தேர்தல் தொகுதியில் 134,104 வாக்காளர்களும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 210,293 வாக்காளர்களும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 105,289 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக 442 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்குடா தேர்தல் தொகுதியில் 123 வாக்கெடுப்பு நிலையங்களும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 197 வாக்கெடுப்பு நிலையங்களும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 122 வாக்களிப்பு காண நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு என்னும் பணி மட்டக்களப்பு இந்து கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
வாக்கு எண்ணும் நிலையத்தில் இடம்பெறுகின்ற ஆயத்த நடவடிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் உதவி மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.எம் சுபியான் நேரில் சென்று பார்வையிட்டனர்