நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், ‘மந்திரவாதி மருத் துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச் சர் செயற்படுகிறார் என முன்னாள் நிதிய மைச்சர் மங் கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலிலிருந்து மீட்டெழ மத வழிபாட்டில் ஈடுபடுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்சஷ மதத்தலைவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங் களில் வெளியாகின.
இந்நிலையில், மங்கள தனது டுவிட்டர் பக்கத்தில் இவ் வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிர மடைந்து வருகின்ற நிலையில் ‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோ சனைக்கு அமைவாகச் சுகாதார அமைச்சர் செயற் பட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் விஞ்ஞானத்தை நம்புகின்ற பகுத்தறிவுள்ள ஒரு மனிதரான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, சர்வ தேசத்தின் மத்தியில் எமது நாட்டை நகைப்பிற்குரியதாக மாற்றும் வகையிலான தனது அமைச்சர்களின் செயற் பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மங்கள தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப் பிட்டுள்ளார்.