மனித உயிர்களை காவு கொண்டு பெரும் அச்சுறுத்தல் விடுத்த காட்டு யானை பிடிபட்டது !

0
193
சிகிரியா மற்றும் சூழவுள்ள கிராமங்களில் வாழும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் விடுத்து வந்த காட்டு யானை பகீரதப் பிரயத்தனத்தின் பின்னர் பிடிக்கப்பட்டது.அனுராதபுரம் பண்டுலகம கால்நடை வைத்திய பிரிவு, கிரிதலே கால்நடை வைத்திய பிரிவு, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் காட்டு யானைகளை பிடிக்கும் சிறப்பு பிரிவு மற்றும் சிகிரியா வனவிலங்கு உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட கடும் சிரத்தையின் பின்னர் சிகிரியா பொதான பகுதியில் இந்த காட்டு யானை நேற்று முன்தினம் பிடிக்கப்பட்டது.இந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த காலத்தில் இந்த பகுதியில் சிலர் உயிரிழந்ததாக சிகிரியா வனவிலங்கு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.35 வயதுடைய குறித்த காட்டு யானை 10 அடி உயரம் கொண்டதாகும்.வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்ட இந்த காட்டு யானை அனுராதபுரம் ஹொரவப்பொத்தானை காட்டு யானைகள் பாதுகாப்பு மத்திய நிலையத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது