மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட மணி மாஸ்டர் விருதுக்கான திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
வி.எம்.சி.ரி நிறுவனத்தின் இயக்குநர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.
கௌரவ விருந்தினரான மன்னார் உதவிக் கல்வி பணிப்பாளர் பா.ஞானராஜ் மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.
திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் மகத்தான சேவையை பாராட்டி, அவருக்கு, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.