26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மன்னார் – நானாட்டான் இசைமாளத்தாழ்வில் நிலக்கடலை அறுவடை

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இசைமாளத்தாழ்வு கிராமத்தில், பொதுமக்கள்- தனியார் கூட்டு உற்பத்தி திட்டத்தின் மூலம்
செய்கைப் பண்ணப்பட்ட நிலக்கடலை நேற்று அறுவடை செய்யப்பட்டது.

கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தானின் பங்கேற்போடு அறுவடை செய்யப்பட்டது.

நாட்டின் சமகால பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு விவசாயத்தினை தமது ஜீவனோபாயத் தொழிலாக முன்னெடுத்து வரும் குடும்பங்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் வேண்டுகோளின் பெயரில் ஐ.எல்.ஒ நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள், தனியார் கூட்டு உற்பத்தித் திட்டத்தின் மூலம், இசைமாளத்தாழ்வு கிராமத்தில் நிலக்கடலை பயிரிடப்பட்டு, நேற்று அறுவடை செய்யப்பட்டது.

அறுவடை மூலம் பெறப்பட்ட நிலக் கடலையை உரிய முறையில் பிரித்து எடுத்து பதப்படுத்தும் இயந்திரம் ஒன்றையும் குறித்த பகுதி கமக்கார அமைப்புகளிடம் இராஜாங்க அமைச்சர் கையளித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சகீலா பானு, மேலதிக பணிப்பாளர் மெரின் குமார், நிறுவனத்தின் மாவட்டப் பொறுப்பாளர் உள்ளிட்ட கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles