மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 15 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மருத்துவ தேவைகளை நிறைவேற்ற முடியாத 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலன் கருதி, விசேட மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது.
டெவ்லிங் நிறுவனத்தின் அனுசரணையில், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் குறித்த இலவச மருத்துவ முகாம், மன்னார் கருங்கண்டல் பாடசாலையில் இடம்பெற்றது.
நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், அருட்தந்தையர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட 15 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட முதியவர்கள் கலந்துகொண்டனர்.
மருத்துவ முகாமில் கலந்துகொண்ட முதியவர்களில் தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலி, ஊன்று கோல் என்பன வழங்கப்பட்டதுடன், மருத்துவ ஆரோக்கியம் தொடர்பிலான விழிப்புணர்வு செயற்பாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.