பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய, ‘மன்ன ரொஷான்’ என அழைக்கப்படும் ரொஷான் இந்திக மற்றும் அவரது நண்பரான சுபுன் தினேஸ் ஆகியோர், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுக்க, துன்னானை பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில், துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன், நேற்று இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், ‘மன்ன ரொஷான்’ என அழைக்கப்படும் ரொஷான் இந்திக மற்றும் அவரது நண்பரான சுபுன் தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டுபாயில் வசிக்கும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் பாதாள உலகக் குழு உறுப்பினரான லலித் கன்னங்கரவின் வழிகாட்டுதலின் கீழ், ‘கண்ணாடி திலின’ என்ற பாதாள உலகக் குழு நபரே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.