கொழும்பில் உள்ள மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஹசன் அமீர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவை கடற்படைத் தலைமையகத்தில் இன்று நேற்று சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் இருதரப்பு நலன்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.