இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன அஞ்சலி செலுத்தினார்.
நேற்று இரவு சேனாதிராஜா காலமான நிலையில், வைத்தியசாலையின் நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி இன்று அதிகாலை அவரது பூதவுடலைப் பொறுப்பேற்ற சிறீதரன் எம்.பி, மாவிட்டபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து, பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பூதவுடல் சேனாதிராஜாவின் , அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 03 மணிக்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.