மினுவாங்கொட கொரோனா பரவல் சீதுவ ஹோட்டல் மூலம் ஆரம்பித்திருக்கலாம் என தெரிவித்துள்ள இராணுவதளபதி இந்திய மீனவர்களிடமிருந்து மீன்களை கொள்வனவு செய்தவேளை பேலியகொடை பரவல் ஆரம்பித்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.மினுவாங்கொட பேலியகொட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை ஆரம்பித்துவைத்தவர் யார் என்பது குறித்த விசாரணைகளின் போது பல விடயங்கள் தெரியவந்துள்ளன என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
கொரேனாவை பரப்பியவர் என்பதை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளில் 80 வீதம்தற்போது பூர்த்தியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆறு விதமான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் பூர்த்தியடைந்தவுடன் இது குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பிலிருந்த நபர் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன எனினும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் கையாள்வதால் இதற்கான வாய்பில்லை என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு குறுகிய காலவிஜயத்தினை மேற்கொண்டவேளை ஹோட்டலகளில் தனிமைப்படுத்தப்பட்ட மாலுமிகள் விமானவோட்டிகள் மூலமாகவும்,மத்தல கொழும்பு விமானநிலையத்திற்கு வந்தவேளை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட விமானப்பணியாளர்கள் மூலமாகவும் இலங்கை துறைமுகத்தில் தரித்துசென்ற கப்பல்கள் அல்லது மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் மூலமாகவும் கொரோனா பரவல் ஆரம்பித்திருக்க கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
துருக்கியிலிருந்து வந்து சீதுவை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளியான உக்ரைன் பிரஜை மூலமாகவும் கொரோனா பரவல் மீண்டும் ஆரம்பித்திருக்கலாம்.கொரோனாவினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பிரஜை தனிமைப்படுத்தப்பட்டவேளை ஹோட்டல் நிருவாகம் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
அவ்வேளை ஹோட்டலில் பணியாற்றியவர்களில் சிலர் வீடுகளிற்கு சென்றுள்ளனர்என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
இதுவே மினுவாங்கொட பரவலிற்கு காரணமாகயிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் நிலவுகின்றது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் இலங்கை வருவதற்கு முன்னர் எந்த நோயாளியும் கண்டுபிடிக்கப்படாததால் இந்த சந்தேகம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளாது.
பேலியகொட கொரோனா பரவலிற்கு இந்தியர்களிடமிருந்து மீன்களை கொள்வனவு செய்து மீனவர்கள் விற்பனை செய்தமை காரணமாகயிருக்கலாம் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.