மினுவாங்கொட பொலிஸ் நிலையத் தடுப்புக்காலில் வைக்கப்பட்டிருந்த 25 வயது இளைஞர் ஒருவர் இன்று காலை தீடீர் மரணமடைந்துள்ளார்.
திருட்டுக் குற்றச்சாட்டு ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்த இளைஞர் மரணமடைந்தமைக்கான காரணம் என்ன என்பதை அறிவதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேற்பார்வையில் விஷேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இளைஞன் மரணமடைந்த போது மேலும் நான்கு போர் அவருடன் தடுப்புக்காவில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
பிரேதபரிசோதனை அறிக்கை இன்று மாலை கிடைக்கும் எனவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றது.