26 C
Colombo
Monday, January 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கப்படுமாயின் தொழிற்சாலைதுறைகளை எவ்வாறு கொண்டு நடத்துவது – பாராளுமன்ற உறுப்பனர் ஜீ.எல்.பீரிஸ்

மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிக்கப்படுமாயின் தொழிற்சாலைதுறைகளை எவ்வாறு கொண்டு நடத்துவது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு முதலீடுகள் அவசியம் என்று தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகின்றது.

கடனை வைத்துக்கொண்டு இருக்க முடியாது எனவே முதலீடுகள் அவசியம் என்று தொடர்ச்சியாகக் கூறிவருகின்றனர்.

முதலீடுகளுக்கு நிரந்தரமான வரிக்கொள்கை என்பது அவசியம்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வரிகளில் மாற்றங்களை செய்வதால் நாட்டில் வியாபாராத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்து இருக்கும் தரப்பினருக்கு நம்பிக்கையீனமே ஏற்படும்.

வியாபாரிகள் சந்தைகளில் தங்களது பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். அந்தப் பொருட்களை வாங்குவதற்கு நுகர்வோரிடம் பணம் இருக்க வேண்டும்.

பொருட்களை வாங்குமளவு நுகர்வோரிடம் பணம் கையிருப்பில் இருக்கின்றதா?

இன்று எமது நாட்டில் பணவீக்கமானது நூற்றுக்கு 60 சதவீதமாகக் காணப்படுகின்றது.

உணவு பணவீக்கம் நூற்றுக்கு 95 சதவீதமாக காணப்படுகின்றது.

தற்போது தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.

வாழ்க்கை செலவீனம் வானளவு உயர்ந்துகொண்டு செல்கின்றது. வருமானத்துக்கான மார்க்கங்கள் இல்லாமல் போகின்றன.

இதுவே இன்று எமது நாட்டில் காணப்படும் யதார்த்தமாகும்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை.

அடுத்த மாதத்திலிருந்து மின்சார கட்டணம் என்பது 70 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

அவ்வாறாயின் நாட்டில் தொழிற்சாலை துறைகளை; எவ்வாறு வெற்றிகரமாக முன்கொண்டு செல்வது.

இவற்றுக்கான தீர்வை தேடுவது மிகவும் அவசியமானதாகும்.

Related Articles

ஊடகவியலாளர் நிபோஜன் சற்று முன் விபத்தில் உயிரிழப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்படும் ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழந்துள்ளார்! சற்று முன் கொழும்பு...

இனி சம்பந்தன், மாவையுடன் சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை! சி.வி.விக்னேஸ்வரன்.

கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் தனது நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றி விட்டார்!சட்டத்தரணி தவராஜா,

பாராளுமன்ற உறுப்பினர் M A சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றி விட்டார் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஊடகவியலாளர் நிபோஜன் சற்று முன் விபத்தில் உயிரிழப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்படும் ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழந்துள்ளார்! சற்று முன் கொழும்பு...

இனி சம்பந்தன், மாவையுடன் சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை! சி.வி.விக்னேஸ்வரன்.

கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் தனது நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றி விட்டார்!சட்டத்தரணி தவராஜா,

பாராளுமன்ற உறுப்பினர் M A சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றி விட்டார் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும்...

காத்தான்குடி ஷூஹதா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்திலுள்ள ஷூஹதா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தையும் பாரம்பரிய உணவுக் கண்காட்சியும் இன்றுகல்லூரி வளாகத்தில் இடம் பெற்றதுவித்தியாலயத்தின் அதிபர் எம்.சி.எம்.முனீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,...

பதவியை துஷ்பிரயோகம் செய்தாரா மட்டக்களப்பு முதல்வர்?- பிரதி முதல்வர் எழுப்பும் சந்தேகம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த, மட்டக்களப்பு மாநகர முதல்வராகக் கடமையாற்றும் தியாகராஜா சரவணபவன், மாநகர கட்டளைச் சட்டதை உதாசீனம் செய்து, பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளாரா?என்ற சந்தேகத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச்...