மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில், மக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர், எதிர்வரும் 15 ஆம் திகதி, இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2024/07/23.00_05_35_05.Still026-1024x576.jpg)
இதற்கு முன்னர் பதிவு செய்த, பல்வேறு தொழிற்துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 46 பேரிடம், கருத்துக்கள் பெறப்பட்டதாகவும், மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை, இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
அந்த முன்மொழிவுகளின்படி, 13.8 வீதம், மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும்.
எனினும், ஹோட்டல் மற்றும் தொழில்துறைகளுக்கான மின்சாரக் கட்டணக் குறைப்பு எதுவும் முன்மொழியப்படவில்லை.