மீனவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதை, மீனவ சமூகம் விரும்பவில்லை எனவும், மீனவர் பிரச்சினைகளுக்கு, காலம் தாழ்த்தாது, உடனடியாக தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.