மீன் வாங்க சென்ற இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா

0
199

பேலியகொட மீன் சந்தையில் மீன் வாங்க சென்ற இராணுவ அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் இதனை உறுதி செய்துள்ளது.

நேற்றை தினம் இலங்கையில் 866 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதுடன் அவர்களுள் 257 பேர் இதற்கு முன்னர் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.