வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்தார் என மீரிகம சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
மீரிகம – பல்லேவெல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 68 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாதுபிட்டிவல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழில்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதையடுத்து இப்பகுதியிலுள்ள சில வீடுகளில் வசிப்பவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவரே உயிரிழந்தார்.