மீள திறக்கப்படும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்!

0
42

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி கற்றல் செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 23ஆம் திகதி அனைத்து மாணவர்களும் விடுதிகளுக்கு அனுமதிக்கப்படுவர்.

இரண்டு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அண்மையில் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.