முக்கிய நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

0
163

இன்று பிற்பகல் பதிவான காற்று தரச்சுட்டெண்ணுக்கமைய, கம்பஹா, யாழ்ப் பாணம், அம்பலாந்தோட்டை மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியிருந்தது. பிற்பகல் 3.26 க்கு பதிவான காற்று தரச்சுட்டெண்ணுக்கு அமைய, கம்பஹாவில் 169 ஆகவும், யாழ்ப்பாணத்தில் 162 ஆகவும், அம்பலாந்தோட்டையில் 158 ஆகவும், நீர்கொழும்பில் 154 ஆகவும் பதிவாகியிருந்தது. அவ்வாறே, கொழும்பு, பத்தரமுல்லை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய நகரங்களின் காற்றின் தரம், சுவாச கோளாறு கொண்ட குழுவினருக்கு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியிருந்தது.