தற்போது முதல் கிலோமீற்றருக்கு 120 ரூபாயும் இரண்டாவது கிலோமீற்றருக்கு 100 ரூபாயும் வழங்குவது நியாயமானது. சில சங்கங்கள் கட்டணத்தை அதிகரிக்க முன்வந்த போதிலும் அதனை தாம் நிராகரித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதேன் ஜயருக் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர் விடயம் தொடர்பில் அரசாங்கம் மீற்றர் நிறுவனத்துடன் கலந்துரையாட வேண்டியது அவசியம்.
120 முதல் 100 வரையிலான விலை மீற்றரில் காட்டப்படாவிட்டால், முச்சக்கரவண்டியை நிராகரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,
மீற்றர் கணக்கில் மாற்றம் செய்வதற்காக மீற்றர் நிறுவனத்துக்கு 200 ரூபாய் செலத்தப்படுகின்றது.
எனவே இது தொடர்பில் மீற்றர் நிறுவனத்துடன் கலந்துரையாடுமாறு நாம் அரசாங்கத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
ஏனெனில், மாதமொன்றுக்கு இரு தடவைகள் எரிபொருளை மறுசீரமைக்கும்போது முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இருமுறை மீற்றர் கட்டண மாற்றத்துக்காக பணத்தை செலவழிக்க வேண்டி ஏற்படுகின்றது. இதனால் முச்சக்கரவண்டிகளுக்கு நட்டமே ஏற்படுகின்றது.
எனவே மாதமொன்றுக்கு இருமுறை மீற்றர் கணக்கில் மாற்றம் செய்வது என்பது இயலாத காரியமாகும்.
மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி, கார் அறிமுகப்படுத்தப்பட்டது சிறந்த விடயமாகும்.
நாடு எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடி நிலைமையில் இவ்வாறான முச்சக்கர வண்டி
அறிமுகப்படுத்தப்பட்டதை சிறந்த விடயமாகவே கருதுகின்றோம்.
எனினும் அது தொடர்பில் கணக்கிட்டுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.