முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு அடுத்த வாரம் முதல் நீக்கம்

0
92

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த முப்படை பாதுகாப்பை அடுத்த வாரம் முதல் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது .முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்தார்

இதுவரை வழங்கப்பட்டு வந்த முப்படை பாதுகாப்பை அடுத்த வாரம் முதல் நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் பொலிஸ் பாதுகாப்பு மாத்திரம் வழங்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்