31 C
Colombo
Saturday, September 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முன்னாள் பீடாதிபதி சோமசுந்தரம் கந்தையாவின் நினைவுநாள் நிகழ்வு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் முதலாவது பீடாதிபதி சோமசுந்தரம் கந்தையாவின் நினைவுநாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று நடைபெற்றன.

கிளிநொச்சி வளாக விவசாய பீட கோட்போர் கூட மண்டபத்தில் விவசாய பீடத்தின் பீடாதிபதி மு.பகீரதன் தலைமையில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

நினைவு நாள் நிகழ்வில் யாழ.; பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா கலந்து கொண்டதுடன் நினைவுப் பேருரையையும் ஆற்றியிருந்தார்.

அத்துடன் நிகழ்வில் ஜப்பான் நாட்டின் கியூசூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி ஜசுகிரோ மொரீட்டா உலர் வலயத்தில் கால்நடை வளர்ப்பு என்ற தொனிப்பொருளில் நினைவு விரிவுரையை நிகழ்த்தியிருந்தார்.

குறித்த நிகழ்வில் ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், விவசாயபீட மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles