முன்னாள் மனைவி உட்பட 6 பேரை சுட்டுக் கொன்ற நபர்; அமெரிக்காவில் சம்பவம்

0
142

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது முன்னாள் மனைவி உட்பட 6 பேரை சுட்டுக் கொன்றுள்ளார்.

மிசிசிப்பி மாநிலத்தின் அர்கபுட்லா நகரின் வெவ்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய 52 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் நிலையமொன்றில் ஒருவரை சுட்டுக்கொன்ற இந்நபர் பின்னர் அருகிலுள்ள தனது வீடொன்றுக்கு சென்று தனது முன்னாள் மனைவியை கொன்றுள்ளார்.

அதன்பின் தனது வீட்டுக்குச் சென்று வளர்ப்புத் தந்தையை சுட்டுக் கொன்றார். பின்னர் வேறு மூவரையும் அவர் சுட்டுக்கொன்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.