முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில், 20 ஆவது கிலோ மீற்றர் வனப் பகுதியில், காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று மாலை, மண்வெட்டி பிடி வெட்டுவதற்காக சென்ற வேளையிலே, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதன் போது, வவுனியா மெனிக்பாம் கிராமத்தை சேர்ந்த, ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் வசித்து வந்த, 48 வயதுடைய பச்சைமுத்து புலேந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார். அனர்த்தம் இடம்பெற்ற பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒட்டுசுட்டான் பொலிசார், விசாரணைகளை மேற்கொண்டனர்.