முல்லைத்தீவு – மாந்தைகிழக்கு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சந்தைப்படுத்த முடியாத நிலை!

0
154

முல்லைத்தீவு – மாந்தைகிழக்கு வவுணிக்குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொண்ட விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை சந்தைப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருப்பதாக கவலை தெரிவிகின்றனர்.
நெல்லை உரிய விலைகளில் சந்தைப்படுத்த முடியாத சூழ்நிலையில் பெரும் கஸ்ரங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாற்பதாயிரம் ரூபாவிற்கு உரத்தினையும் அதிகூடிய விலைகளில் களை நாசினிகளையும் வாங்கி பயன்படுத்தி விவசயத்தை செய்து, டீசல் பிரச்சினையால் உரிய நேரத்தில் அறுவடை செய்ய முடியாது கடும் நெருக்கடியில், அறுவடை செய்த நெல்லை உரிய விலைகளில் சந்தைப்படுத்த முடியாதுள்ளமையால், பெரும் நட்டத்தினை எதிர்கொள்ளும் நிலை உள்ளதாகவும்,
இவ்வாறானதொரு நிலைமை நீடிக்கும் பட்சத்தில் விவசாய செயற்பாடுகளை மட்டுப்படுத்தும் நிலைமை உருவாகும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.