முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகள் மற்றும் வாக்குசீட்டுக்களை அனுப்பும் பணிகள் நிறைவடைந்திருக்கின்றது என மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வன்னித் தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் தெரிவித்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான அ. உமாமகேஸ்வரன் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.