முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் வாழ்விட வசதிகள், வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றால் பல்வேறு கஸ்ரங்களை எதிர்கொள்வதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வரும் சிறு குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப்பலரும் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களைக் கொண்ட குடும்பங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடி, தொழில் வாய்ப்பின்மை, வருமானமின்மை என்பவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஒரு நேர உணவைக்கூட உட்கொள்ளமுடியாதுள்ளதாகவும் அரச கொடுப்பனவுகளாக சமுர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் என்பவற்றின் மூலம் ஒரு வாரம் கூட வாழ முடியாதுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.