24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முல்லை. புதுக்குடியிருப்பில் சம்பவம்: காணாமல்போகும் பசு மாடுகள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில், அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்ற நிலையில், மாடுகளை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றினை, நேற்றிரவு இளைஞர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

கடந்த மாதம் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் வீட்டு காணி ஒன்றில் இருந்த பட்டியில் பசு மாடுகள் காணாமல் போயிருந்தன. அதேபோன்று புதுக்குடியிருப்பு பகுதிகளில் அதிகளவான வளர்ப்பு மாடுகள் காணாமல் போயிருந்தன.

இதனையடுத்து குறித்த கால்நடைகளின் உரிமையாளர்களினால் பொலிஸில் முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில்,
மாடு கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வேகன் ரக வாகனம் குறித்த பகுதிகளில் நடமாடுவதை கிராம மக்கள் அவதானித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தேகத்திற்குரிய வாகனத்தை பிடிக்க முயற்சி செய்து பலனளிக்காத நிலையில், வாகன இலக்கத்தினை கண்காணித்து வைத்திருந்து, நேற்றையதினம் சந்தேகிக்கப்பட்ட வேகன் ரக வாகனம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சென்ற நிலையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டமையை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வாகனத்தையும், சாரதியையும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

வாகனத்தை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles