பிரான்சும் ஐரோப்பாவும் முஸ்லிம்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.இதேவேளை ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி இருக்கும்போதே அனைத்து மக்களும் ஒன்றாக வாழ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முஸ்லீம் விவகாரங்களில் மேற்கத்தியர்களின் கொடுமை மற்றும் முறையற்ற தலையீட்டால் அனைத்து பிரச்சினைகளும் வெறுப்பும் எழுகின்றன என்றும் ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.மேலும் நபிகள் நாயகத்தை அவமதிப்பது கலை அல்ல என்றும் அது வன்முறையை ஊக்குவிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.ஆகவே ஜனநாயகம் மற்றும் கலை பற்றிய கூற்றுக்கள் தற்செயலாக வன்முறையை ஊக்குவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் ஹசன் ரௌஹானி குறிப்பிட்டுள்ளார்.