“இலங்கையில் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய கொத்தணி உருவாகும் அபாயம் என தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொதுச் செயலாளரும் தொற்று நோயியல் நிபுணருமான வைத்தியர் நிஹால் அபேசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.
இவ்வாறான அபாய நிலை உள்ளமையால் அது தொடர்பில் தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரோக்கியமான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும்போது, அவரது வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய நபர்களுக்குத் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது என்றும் நிஹால் அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலை குறித்து அனைவரும் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.