பெரு நாட்டிலுள்ள வணிகவளாகமொன்றின் மேற் கூரைப்பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயேயும் ஒருவர் வைத்தியசாலையிலும் இறந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் வால்டர் அஸ்டுடிலோ நேற்று தெரிவித்துள்ளார்.
இவ்விபத்தில் மொத்தம் 78 பேர் காயடைந்தனர், அதில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் 48 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இடிந்து விழுந்த கூரையின் பரப்பளவு 700 முதல் 800 சதுர மீற்றர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்னும் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
எனவே 100க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் பொலிஸார் இடிபாடுகளுக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.