மேல் மாகாணத்திலிருந்து நேற்றும், நேற்று முன்தினமும் வெளியேறிய அனைவரும் அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடங்களிலேயே 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என காவல்துறை அறிவித்திருக்கின்றது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அதேவேளையில், மேல் மாகாணத்திலிருந்து யாரும் வெளியேறக்கூடாது என இரண்டு தினங்களுக்கு முன்னர் காவல்துறை அறிவித்திருந்தது.
ஆனால், ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக பெருந்தொகையானவர்கள் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியிருக்கின்றார்கள்.
அவ்வாறானவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விஷேட நடவடிக்கை ஒன்றை காவல்துறை நேற்று முடுக்கிவிட்டிருந்தது.
இதன் அடுத்த கட்டமாகவே, வெளியேறிய அனைவரையும் அவர்கள் தற்போதுள்ள இடங்களிலேயே 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.