மேல்மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவைகள் மீள ஆரம்பம்!

0
322

தனிமைப்படுத்தல் ஊரடங்குள்ள மேல் மாகாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் பஸ் போக்குவரத்து சபை சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஆயினும் பஸ்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது எனவும் கால அட்டவணையின்படி பஸ் சேவை இடம்பெறுவதுடன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் நீண்ட தூர பஸ் சேவைகளும் இயக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பஸ் உரிமையாளர்கள் ஆகக்குறைந்த பஸ் கட்டணத்தை ரூ.20.00 ஆக உயர்த்த வேண்டுமென அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.